ADDED : மார் 02, 2024 11:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: ‛‛ அனைத்து வாய்ப்புகள் இருந்தும் மேற்கு வங்க மாநிலம் பின்தங்கி உள்ளது '' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேற்கு வங்கம் சென்றுள்ள பிரதமர் மோடி, ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைத்து பேசியதாவது : உள்கட்டமைப்பு அடிப்படையில், மேற்குவங்க வரலாற்றில், ரயில்வேக்கு முக்கியமான இடம் உண்டு. ஆனால், வரலாற்று ரீதியில் கிடைத்த வளர்ச்சியை மேற்கு வங்கம் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால், தான் அனைத்து வாய்ப்புகள் இருந்தும் மாநிலம் பின்தங்கி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், இங்கு ரயில் கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.முன்பை விட இரண்டு மடங்கு நிதியை மத்திய அரசு செலவு செய்து உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

