ADDED : ஆக 08, 2024 02:17 AM

வயநாடு; வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட 10-ம் தேதி பிரதமர் மோடி. வயநாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம். வயநாடு மாவட்டத்தில் கடந்த, 30ம் தேதி முண்டக்கல், சூரல்மலை ஆகிய இரு பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், மாவட்டத்தின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், இதுவரை இல்லாத வகையில் பெருமளவிலான உயிரிழப்புகளும், சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதுவர 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி பார்வையிட கேரளா வருகிறார்.
கண்ணுர் வழியாக ஹெலிகாப்டர் மூலம் நிலச்சரிவு பகுதிகளை பார்வையிடுகிறார். பின்னர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து பேசுகிறார்.
மோடியுடன் கவர்னர் ஆரிப் முகமதுகான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.