குஜராத்தில் ரயில் இன்ஜின் தயாரிப்பு ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
குஜராத்தில் ரயில் இன்ஜின் தயாரிப்பு ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
UPDATED : மே 26, 2025 02:39 PM
ADDED : மே 26, 2025 10:42 AM

தாஹோத்: குஜராத்தில் ரயில் இன்ஜின் தயாரிப்பு ஆலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் ரயில் இன்ஜின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.82,950 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக, அங்கு சென்றுள்ள அவர் வதோதராவில் ரோடு ஷோ நிகழ்த்தினார்.
அப்போது, சாலையின் இருபக்கங்களிலும் பா.ஜ., தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, கைகளில் தேசிய கொடியை ஏந்தியவாறு, பிரதமர் மீது பூக்களை தூவி தொண்டர்கள் வரவேற்றனர்.
பின்னர், தாஹோத் மாவட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு இந்திய ரயில்வே துறையின், இன்ஜின் தயாரிப்பு ஆலையை திறந்து வைத்தார். மேலும், அந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட 9 ஆயிரம் ஹெச்.பி. திறன் கொண்ட எலக்ட்ரிக் ரயில் இன்ஜின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த எலக்ட்ரி ரயில் இன்ஜின்களானது, இந்திய ரயில்வே துறையில் சரக்கு போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும்.