sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.150 கோடி ஓ.எஸ்.ஆர்., நிலம் கபளீகரம்; பட்டாவை ரத்து செய்ய தயங்கும் வருவாய் அதிகாரிகள்

/

ரூ.150 கோடி ஓ.எஸ்.ஆர்., நிலம் கபளீகரம்; பட்டாவை ரத்து செய்ய தயங்கும் வருவாய் அதிகாரிகள்

ரூ.150 கோடி ஓ.எஸ்.ஆர்., நிலம் கபளீகரம்; பட்டாவை ரத்து செய்ய தயங்கும் வருவாய் அதிகாரிகள்

ரூ.150 கோடி ஓ.எஸ்.ஆர்., நிலம் கபளீகரம்; பட்டாவை ரத்து செய்ய தயங்கும் வருவாய் அதிகாரிகள்

11


ADDED : நவ 14, 2025 07:17 AM

Google News

11

ADDED : நவ 14, 2025 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை அடுத்த பெருங்குடியில், பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட, 150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்பதில், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெருங்குடி மண்டலம், வார்டு 182ல் அமைந்துள்ள சந்தோஷ் நகர், பர்மா காலனி ஆகிய பகுதிகள், 40 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இப்பகுதிகளில் மனைப்பிரிவுகள் உருவாக்கும் போது ஒதுக்கப்பட்ட, பொது பயன்பாட்டிற்கான ஓ.எஸ்.ஆர்., நிலத்தை, போலி பட்டா தயாரித்து, தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதில், சந்தோஷ் நகரில், பூங்கா, பூங்கா செல்லும் பாதை, பள்ளி இடம் என, 8 கிரவுண்டு; ஓ.எம்.ஆர்., அருகே பர்மா காலனியில், 12.5 கிரவுண்டு நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளனர். இதன் தற்போதையை மதிப்பு, 150 கோடி ரூபாய். தாமதம் இதுகுறித்து, சந்தோ ஷ் நகர் மக்கள் நலச்சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:

சந்தோஷ் நகரின் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட சர்வே எண்: 126/7, 127/25, 127/55 ஆகிய போலி பட்டாக்களை ரத்து செய்து, சந்தோஷ் நகர் தலைவர் பெயரில் நிலைநிறுத்த, தென் சென்னை கோட்டாட்சியர், சோழி ங்கநல்லுார் வட்டாட்சியருக்கு கடந்த ஜூன் 27ம் தேதி உத்தரவிட்டார். ஆனால், பள்ளிக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில், ஆக்கிரமிப்பாளர் துவங்கிய கட்டடப்பணி, 90 சதவீதம் முடிந்து, விடுதி நடத்த தேவையான பொருட்களை இறக்கி வருகின்றனர்.

இன்னும் ஒரு மாதத்தில், அனைத்து பணிகளும் முடிந்து, பயன்பாட்டிற்கு வந்துவிடும். எனவே, காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து, பட்டா மற்றும் பத்திர பதிவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

துண்டிப்பு

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சந்தோஷ் நகரில், பள்ளிக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டடப்பணி துவங்கும் போது, பணியை நிறுத்துமாறு எச்சரித்தோம். பணி நடைபெறும் போதும், மூன்று முறை 'லாக் அண்டு சீல்' உத்தரவு நகல் கொடுத்துள்ளோம். அதையும் மீறி, சம்பந்தப்பட்ட நபர் கட்டுமான பணியை நிறுத்தாமல், தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். தவிர, வருவாய்த் துறை அதிகாரிகள் பட்டாவை ரத்து செய்தால் தான், மேற்கொண்டு எங்களால் நடவடிக்கை எடுக்க இயலும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, தாசில்தாரிடம் கேட்டபோது, 'ஆவணங்களை பார்த்துவிட்டுத்தான் பேசமுடியும்' எனக்கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.






      Dinamalar
      Follow us