இன்று குஜராத் செல்லும் பிரதமர் சோம்நாத் கோவிலில் வழிபாடு
இன்று குஜராத் செல்லும் பிரதமர் சோம்நாத் கோவிலில் வழிபாடு
ADDED : ஜன 10, 2026 01:08 AM

புதுடில்லி: இரண்டுநாள் பயணமாக குஜராத்திற்கு செல்லும் பிரதமர் அங்குள்ள சோமநாதர் கோவில் வழிபாடு செய்கிறார்.
பிரதமர் மோடி இன்று (10-ம்தேதி) மற்றும் நாளை (11 ம் தேதி) ஆகிய தினங்களில் குஜராத்மாநிலத்திற்கு செல்ல உள்ளார். அவர் அங்கு அமைந்துள்ள சோமநாதர் கோவிலுக்கு செல்கிறார். இது குறித்து தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:
சோமநாதர் சுயமரியாதை விழா நமது ஆன்மீக பாரம்பரியத்தின் ஒரு சக்திவாய்ந்த சின்னமாகும், இது நாடு முழுவதும் முழுமையான பக்தி, நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இன்று (10-ம் தேதி) இரவு 8 மணியளவில், சோமநாதர் கோவிலில் நடைபெறும் தெய்வீக ஓம்கார மந்திர உச்சரிப்பில் பங்கேற்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைக்கவுள்ளது. அதை தொடர்ந்து, சோமநாதர் கோவிலில் நடைபெறும் ட்ரோன் நிகழ்ச்சியைக் காண உள்ளதாக பதிவிட்டு உள்ளார்.
தொடர்ந்து நாளை (11-ம் தேதி) நடைபெற உள்ள செளரிய யாத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். பின்னர் சோமநாதர் நகரில் நடைபெறும் பொது நிகழ்ச்சி ஒன்றில்கலந்து கொள்கிறார்.
சோமநாதர் கோவில் விழாவில் நாடு முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான துறவிகள் பங்கேற்க உள்ளனர். மேலும், கோவில் வளாகத்திற்குள் 72 மணி நேரம் தொடர்ச்சியாக 'ஓம்' மந்திரம் உச்சரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு, சர்தார் வல்லபாய் படேல்ஆயிரம்ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்குத் தலைமை தாங்கினார்.தற்போது கோவிலில் புனரமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவது, சோம்நாத் சுயமரியாதை விழாவிற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

