ADDED : ஜூலை 13, 2025 01:25 AM
திருவனந்தபுரம்:17 வயது மாணவனை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாதிரியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் சிற்றாரிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பால் தட்டுப்பறம்பில். அதிர்மாவு கத்தோலிக்க சர்ச்சில் பாதிரியாராக இருந்தார்.
இங்கு பிரார்த்தனைக்கு வரும் 17 வயது மாணவன் ஒருவரை பாதிரியார் மிரட்டி பல மாதங்களாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன் இவர் படிக்கும் பள்ளியில் குழந்தைகள் நல அமைப்பு சார்பில் கவுன்சிலிங் நடந்தபோது பாதிரியாரின் செயல் குறித்து கூறியுள்ளார். குழந்தைகள் நல அமைப்பினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பாதிரியார் பால் தட்டுப்பறம்பில் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர் வெளிநாடு சென்றுள்ளதால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். பால் தட்டுப் பறம்பிலை பொறுப்பில் இருந்து நீக்கி தலச்சேரி கத்தோலிக்க சபை அறிவித்துள்ளது.

