உயர் ரக கஞ்சா விற்று வந்ததாக இருவரை கைது செய்த போலீஸ்
உயர் ரக கஞ்சா விற்று வந்ததாக இருவரை கைது செய்த போலீஸ்
ADDED : அக் 10, 2025 10:56 PM
புதுடில்லி:ஹிமாச்சல பிரதேசத்திலிருந்து, உயர் ரக கஞ்சாவை வாங்கி வந்து, அதை டில்லியில் உள்ள மாணவர்கள் மற்றும் பிறருக்கு கொடுத்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் கைது செய்துள்ள இருவரில் ஒருவர் பெயர் சாகர் செஜ்வால். இவரின் கூட்டாளி மனோஜ் சன்சல்வால். துவக்கத்தில் கஞ்சா புகைப்பவராக இருந்து, பின், தனக்கு தெரிந்த நபர்களிடம் கஞ்சா விற்பனையாளராக மாற்றியுள்ளார் மனோஜ் சன்சல்வால்.
இதற்காக இருவரும் சுற்றுலா பயணியர் போல, ஹிமாச்சல பிரதேசம் சென்று, அங்கு விளையும் உயர் தரமான கஞ்சாவை வாங்கி வந்து, டில்லியில் விற்று, கொள்ளை லாபம் சம்பாதித்து வந்துள்ளனர்.
அவர்களை கைது செய்துள்ள போலீசார், அவர்கள் வசம் இருந்து, சொகுசு கார் மற்றும் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், அந்த கஞ்சாவை யாருக்கு, எவ்வளவு ரூபாய்க்கு கொடுத்தனர் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.