பழங்குடியின மக்களின் கலாசார பெருமையை காக்கும் கண்காட்சி
பழங்குடியின மக்களின் கலாசார பெருமையை காக்கும் கண்காட்சி
ADDED : அக் 10, 2025 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பழங்குடியின மக்களின் கலாசார பெருமையை காக்கும் வகையில், டில்லியில், நான்கு நாட்கள் பழங்குடியின மக்களின் கலைப்பொருட்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.
டில்லியில் உள்ள இந்தியா ஹேபிடேட் சென்டரில், சங்கலா பவுன்டேஷன் சார்பில், நான்காவது ஆண்டாக, இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார்.
இதில், பழங்குடியின மக்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், நாடு முழுவதும் உள்ள, அவர்களின் சித்திரங்கள், கைவினைப் பொருட்கள் காட்சிபடுத்தப்படுகின்றன.
நேற்று முன்தினம் துவங்கிய இந்த கண்காட்சி, நாளை வரை நடக்கிறது. இதில், விலங்குகள் பாதுகாப்பு, அவற்றை மனிதர்களிடம் இருந்து காப்பாற்றும் வழிமுறைகள், விலங்குகள் - மனிதர்கள் இணக்கமாக வாழும் முறை குறித்தும் விளக்கப்பட உள்ளன.