ADDED : பிப் 26, 2024 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தர கன்னடா: முதல்வர் சித்தராமையா குறித்து அவதுாறாக பேசிய பா.ஜ., - எம்.பி., அனந்த குமார் ஹெக்டே மீது, முண்டகோடா போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தர கன்னடாவின் முண்டகோடாவில் கடந்த 23ம் தேதி நடந்த பா.ஜ., கூட்டத்தில், 'முதல்வர் சித்தராமையாவை 'சித்தராமுல்லா கான்' என்று கேலி செய்தார். இந்த வீடியோ, ஊடகங்களில் வெளியானது.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, முண்டகோடா போலீசார், தாமாக முன்வந்து, அனந்த குமார் ஹெக்டே மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

