தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கட்டாய மதமாற்றம் போலீஸ் விசாரணை

கட்டாய மதமாற்றம் போலீஸ் விசாரணை

கட்டாய மதமாற்றம் போலீஸ் விசாரணை


UPDATED : நவ 29, 2026 04:32 PM

ADDED : நவ 29, 2026 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 04:32 PM ADDED : நவ 29, 2026 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குருகிராம்: ஹரியானாவில் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஹரியானா மாநிலம் குருகிராம் தவுலதாபாதில் உள்ள, ‘ஹவுஸ் ஆப் ஹோப்’ என்ற மையத்தில் உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் கூட்டங்கள் நடத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, ராஜேந்திரா பூங்கா போலீஸ் ஸ்டேஷனில் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் தீபக் மற்றும் பீம்சிங் ஆகியோர் புகார் மனு கொடுத்தனர். அதில், ‘ஹவுஸ் ஆப் ஹோப்’ என்ற மையத்தில், 400 முதல் 500 பெண்கள் மற்றும் குழந்தைகளை திரட்டி, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ளனர். இந்தக் கூட்டம் நடத்துவது குறித்து, உள்ளூர் நிர்வாகத்துக்கோ அல்லது வார்டு கவுன்சிலருக்கோ தகவல் தெரிவிக்கவில்லை’ என கூறப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, ராஜேந்திர பூங்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் கூறுகையில், “புகார் அடிப்படையில் விசாரணை செய்து வருகிறோம். அந்த இடத்தை வாடகைக்கு எடுத்துள்ள அமைப்பிடம் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பிறகுதான் அங்கு என்ன மாதிரியான செயல்பாடுகள் நடக்கின்றன என்பது தெரியும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us