பாலஸ்தீனக் கொடியுடன் கிரிக்கெட்: காஷ்மீர் வீரருக்கு போலீசார் சம்மன்
பாலஸ்தீனக் கொடியுடன் கிரிக்கெட்: காஷ்மீர் வீரருக்கு போலீசார் சம்மன்
ADDED : ஜன 01, 2026 10:52 PM

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது ஹெல்மெட்டில் பாலஸ்தீனக் கொடியுடன் பங்கேற்ற வீரருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கக் கோரி உலகின் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று(டிச.,31) ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் சாம்பியன்ஸ் லீக் என்ற உள்ளூர் போட்டி நடந்தது. அதில், ஜேகே11 என்ற அணிக்காக பர்கான் பட் என்பவர் விளையாடி உள்ளார். அவர் பேட்டிங் செய்யும் போது, ஹெல்மெட்டில் பாலஸ்தீன கொடி இருந்தது. இதனையடுத்து அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும், இந்தத் தொடரை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் மைதானத்திற்கு இடம் கொடுத்தவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

