ADDED : டிச 16, 2024 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மலப்புரம் : கேரளாவில் நக்சல் அமைப்பின் செயல்பாட்டை ஒடுக்கும் வகையில், மலப்புரம் மாவட்டத்தில் சிறப்பு செயலாக்கப் பிரிவு இயங்கி வருகிறது.
இந்தப் பிரிவில் தண்டர்போல்ட் கமாண்டோ என்ற குழுவில், வினீத், 36, என்ற போலீஸ்காரர் பணியாற்றி வந்தார்.
வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர், விடுமுறை அளிக்குமாறு தன் உயரதிகாரியிடம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால், வினீத்திற்கு அந்த அதிகாரி விடுமுறை அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், வினீத் நேற்று தங்கியிருந்த அறையின் குளியலறையில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த போலீசார், வினீத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.