ADDED : மார் 03, 2024 06:51 AM
பெங்களூரு: கர்நாடகா முழுதும் இன்று முதல் மார்ச் 6 வரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, சுகாதாரம், குடும்ப நலத்துறை வெளியிட்ட அறிக்கை:
மாநிலம் முழுதும், இன்று முதல் மார்ச் 6 வரை போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது.
ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து போடப்படும். தேசிய நெடுஞ்சாலைகள், பஸ் நிலையம், மால், சுங்கச்சாவடி உட்பட முக்கியமான இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெங்களூரில் முதல்வர் சித்தராமையா நிகழ்ச்சியை துவக்கி வைப்பார். அந்தந்த மாவட்டங்களில், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் சொட்டு மருந்து அளிப்பதை துவக்கி வைப்பர்.
முதல் நாளன்று, சொட்டு மருந்து மையங்களிலும், மற்ற மூன்று நாட்கள், வீடு வீடாக சென்றும் சொட்டு மருந்து அளிக்கப்படும்.
கடந்த முறை எந்த பகுதியில், சொட்டு மருந்து போடும் சதவீதம் குறைந்துள்ளதோ, அந்த இடங்களை அடையாளம் கண்டு, அங்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொண்டு, சொட்டு மருந்து போட வேண்டும். தேவையான ஊழியர்களை அதிகாரிகள் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

