sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசியல் உள்நோக்கம்... இந்தியக் குடியுரிமை தொடர்பான வழக்கில் சோனியா பதில்

/

அரசியல் உள்நோக்கம்... இந்தியக் குடியுரிமை தொடர்பான வழக்கில் சோனியா பதில்

அரசியல் உள்நோக்கம்... இந்தியக் குடியுரிமை தொடர்பான வழக்கில் சோனியா பதில்

அரசியல் உள்நோக்கம்... இந்தியக் குடியுரிமை தொடர்பான வழக்கில் சோனியா பதில்

20


UPDATED : பிப் 07, 2026 03:59 PM

ADDED : பிப் 07, 2026 03:57 PM

Google News

20

UPDATED : பிப் 07, 2026 03:59 PM ADDED : பிப் 07, 2026 03:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, ஐரோப்பிய நாடான இத்தாலியில் பிறந்தவர். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவை 1968ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, 1983ல் இந்திய குடியுரிமை பெற்றார். ஆனால், அதற்கு முன்பாகவே, 1980ல் சோனியாவின் பெயர் டில்லி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1982 வாக்காளர் பட்டியலின் நகல் மட்டுமே மனு தாரர் தாக்கல் செய்ததால், போதிய ஆதாரமில்லை எனக் கூறி, மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, இது தொடர்பாக பதிலளிக்கும்படி சோனியா மற்றும் டில்லி போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி, டில்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா இன்று பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், 'இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயர் சேர்க்கப்பட்டதாக போடப்பட்டுள்ள வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்






      Dinamalar
      Follow us