ADDED : ஜன 20, 2024 06:11 AM

நியூ திப்பசந்திரா: பெங்களூரு நியூ திப்பசந்திரா சிவானந்தா நகர் பகுதியில் உள்ள ஆதித்யா ஸோய்க்னே அடுக்குமாடி குடியிருப்பில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆதித்யா ஸோய்க்னே அடுக்குமாடி குடியிருப்பில், 50க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. ஆண்டுதோறும் தமிழ் கலாசார முறைப்படி இங்கு பொங்கல் விழா கொண்டாடப்படும்.
இந்த முறையும், தமிழ்ச்குடும்பங்கள் அனைவரும் சேர்ந்து, சமத்துவ பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு பூஜை செய்து, பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என, குலவையிட்டுக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அனைவருக்கும் பொங்கல், கரும்பு வினியோகிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பாரம்பரிய நையாண்டி மேளம் குழுவினரும், கரகாட்ட குழுவினரும் இணைந்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆதித்யா ஸோய்க்னே அடுக்குமாடி குடியிருப்பு தமிழ் குடும்பங்களோடு இணைந்து, பெங்களூரு தமிழ் இலக்கியப் பேரவை ஒருங்கிணைத்து கலைநிகழ்ச்சி குழுவினரை ஏற்பாடு செய்துருந்தனர்.
விழாவை ஒட்டி நடந்த ஓவிய போட்டி, ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளில் சிறுவர் சிறுமியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழர் பாரம்பரிய முறைப்படி, ஆண்கள் வேட்டி சட்டையும், பெண்கள் சேலையும் அணிந்து உற்சாகமாக காணப்பட்டனர்.