sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குட் பேட் அக்லி வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை புகார்; போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறியதாக குற்றச்சாட்டு

/

குட் பேட் அக்லி வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை புகார்; போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறியதாக குற்றச்சாட்டு

குட் பேட் அக்லி வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை புகார்; போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறியதாக குற்றச்சாட்டு

குட் பேட் அக்லி வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை புகார்; போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறியதாக குற்றச்சாட்டு

4


ADDED : ஏப் 17, 2025 01:16 PM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:16 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: போதைப்பொருளை பயன்படுத்தி தன்னிடம் அத்துமீறியதாக குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

மலையாளத் திரையுலகில் பெண்கள் வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை, கடந்த வருடம் கேரளாவில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை உறுதி செய்தது. அதுமட்டுமல்லாமல் போதைப் பொருள் கலாச்சாரமும் இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தது.

சமீபத்தில் கோழிக்கோடு பகுதியில் கைது செய்யப்பட்ட இருவரில் பெண் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தில், பிரபல நடிகர்களான ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகியோருக்கு நாங்கள் தொடர்ந்து போதைப்பொருள் சப்ளை செய்தோம் என குறிப்பிட்டது, அதை இன்னும் உறுதி செய்வதாக அமைந்தது.

இந்த நிலையில், இளம் நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் இதை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக, தனது படங்களில் போதை மருந்து பயன்படுத்திய நடிகரால் தனக்கு ஏற்பட்டு அனுபவம் குறித்து அது அதிர்ச்சிகரமான தகவலை வெளிப்படுத்தி உள்ளார்.

மலையாளத்தில் விக்ருதி, ஜன கன மன, சவுதி வெள்ளக்கா உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான இவர், . 2023ல் வெளியான ரேகா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரளா அரசு விருது மற்றும் பிலிம்பேர் விருது இரண்டையும் பெற்றவர்.

இது குறித்து அவர் கூறும்போது, “சம்பந்தப்பட்ட நடிகரின் பெயரை குறிப்பிடாமல், “நான் ஒரு படத்தில் பணியாற்றியபோது அந்த படத்தில் முக்கிய நடிகராக நடித்தவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார். ஒரு முறை நான் அணிந்திருந்த ஆடையில் ஒரு சிறிய பிரச்னை என்பதால் அதை சரி செய்வதற்காக ஒரு தனி அறைக்கு செல்ல முற்பட்டேன். அப்போது நானும் கூடவே வந்து உதவி செய்கிறேன் என என்னுடன் வர முற்பட்டார்.

அது மட்டுமல்ல இன்னொரு நாள் ஒரு பாடல் காட்சிக்கான ரிகர்சலின் போது திடீரென அவரது உதட்டில் இருந்து வெள்ளையான நிறம் கொண்ட பொருள் வெளிப்பட்டது. அப்போதே எனக்கு அவர் போதை பொருள் பயன்படுத்தி இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. அதனால் இனிமேல் போதை பொருள் பயன்படுத்துபவர்களுடன் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கை முடிவாகவே எடுத்துள்ளேன்” என்று கூறியிருந்தார்.

அந்த நடிகர் யாராக இருக்கும் என்று சந்தேகம் எழுந்து வந்த நிலையில், போதைப் பொருளை பயன்படுத்தி விட்டு, தன்னிடம் அத்துமீறியதாக ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை வின்சி அலோசியஸ் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து விசாரிக்க, அன்சிபா ஹாசன், வினு மோகன் மற்றம் சாராயு மோகன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முதலில் சாக்கோவிடம் கருத்து கேட்கப்படும் என்று அந்தக் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். சாக்கோ இதற்கு முன்பு ஆலப்புழா போதைப்பொருள் விவகாரத்திலும் சம்பந்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஷைன் டாம் சாக்கோ அண்மையில் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.






      Dinamalar
      Follow us