ADDED : ஜூலை 13, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் கோட்டா சீனிவாச ராவ், 83, வயோதிகம் தொடர்பான நோயால் காலமானார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ், கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பாதிப்பால், சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில் வயோதிகம் தொடர்பான நோய்களால் அவதிப்பட்ட இவர், ஹைதராபாதில் உள்ள வீட்டில் நேற்று காலமானார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியுடன், 1978ல் வெளியான பிரானம் கரீடு என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான இவர், தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளில், 750க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார்.
தமிழில் விக்ரம் நடித்த சாமி, விஜய் நடித்த திருப்பாச்சி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.