sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

/

புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு


ADDED : பிப் 20, 2025 10:37 PM

Google News

ADDED : பிப் 20, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ரேகா குப்தா, உள்துறை, நிதி, சேவை, லஞ்ச ஒழிப்பு, திட்டம் ஆகிய துறைகளை தன்னிடம் வைத்துள்ளார்.

துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பர்வேஷ் வர்மாவுக்கு கல்வி, பொதுப்பணி, போக்குவரத்து துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கபில் மிஸ்ராவுக்கு நீர், சுற்றுலா, கலாசாரம் ஆகிய இலாகாக்களும், மஞ்சிந்தர் சிங் சிர்சாவுக்கு சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, தொழிற்சாலைகள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ரவீந்தர் குமார் இந்திரஜுக்கு சமூகநலத்துறை, எஸ்.சி., எஸ்.டி., நலன், தொழிலாளர் நலத்துறைகளும், ஆஷிஷ் சூட்டுக்கு வருவாய், சுற்றுச்சூழல், உணவு மற்றும் விநியோகத்துறைகளும் பங்கஜ் குமார் சிங்கிற்கு சட்டம், சட்டசபை விவகாரங்கள், வீட்டுவசதி ஆகிய துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பர்வேஷ் வர்மா

புதுடில்லி தொகுதி எம்.எல்.ஏ.,1977 நவம்பர் 7 அன்று பிறந்த இவர், முன்னாள் டில்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன். டில்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லுாரியில் பட்டம் பெற்ற இவர், பின்னர் போர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றார்.முன்னாள் மத்திய அமைச்சரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., தலைவருமான விக்ரம் வர்மாவின் மகள் ஸ்வாதி சிங்கை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.இரண்டு முறை பா.ஜ., - எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



கபில் மிஸ்ரா

கரவல்நகர் தொகுதி எம்.எல்.ஏ.,முன்னாள் ஆம் ஆத்மி கட்சித் தலைவரான கபில் மிஸ்ரா, 1980 நவம்பர் 13 அன்று டில்லியில் பிறந்தார். கிழக்கு டில்லியின் முன்னாள் மேயரான அன்னபூர்ணா மிஸ்ரா மற்றும் சோசலிசத் தலைவர் ராமேஷ்வர் மிஸ்ரா ஆகியோரின் மகன். டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் கல்லுாரியில் பட்டப்படிப்பு.அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசில் நீர்வள அமைச்சர். 2017ம் ஆண்டில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, 2019ல் பா.ஜ.,வில் இணைந்தார்.2020ம் ஆண்டு டில்லியில் நடந்த வகுப்புவாத கலவரத்தின்போது வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பேசியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.



மஞ்சிந்தர் சிங் சிர்சா

ரஜோரி கார்டன் தொகுதி எம்.எல்.ஏ., தன் தாய்மொழியான பஞ்சாபி மொழியில் பதவியேற்றார்.பா.ஜ.,வின் சீக்கிய முகம். மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த மஞ்சிந்தர் சிங் சிர்சா, முன்பு ஷிரோமணி அகாலி தளத்தில் இருந்தார். 2021ல் பா.ஜ.,வில் சேர்ந்தார். தீவிர சமூக சேவகர்.டில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தின்படி, சிர்சாவின் நிகர மதிப்பு 188 கோடி ரூபாய்க்கும் அதிகம். இவரது மனைவி சத்விந்தர் கவுர் சிர்சாவுக்கு 71 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து இருக்கிறது.



ஆஷிஷ் சூட்

டில்லியின் பஞ்சாபி சமூகத்தில் ஆஷிஷ் சூட் நன்கு அறியப்பட்ட நபர். 1966 செப்டம்பர் 2ல் பிறந்த ஆஷிஷ் சூட், ஜனக்புரியிலிருந்து முதன்முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தெற்கு டில்லி மாநகராட்சியில் பா.ஜ., ஆட்சியின்போது நிர்வாக விஷயங்களில் சில நேரடி அனுபவங்களைப் பெற்ற மூத்த தலைவர்.பா.ஜ.,வின் டில்லி பிரிவின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். கோவா பா.ஜ., பொறுப்பாளராகவும், கட்சியின் ஜம்மு - காஷ்மீர் பிரிவின் இணைப் பொறுப்பாளராகவும் உள்ளார்.



பங்கஜ் குமார் சிங்

விகாஸ்புரி முதல் முறை எம்.எல்.ஏ., பூர்வாஞ்சலி தலைவர், பல் மருத்துவர்.



ரவீந்தர் குமார் இந்திரஜ்

பவானா தனி தொகுதி முதல் முறை எம்.எல்.ஏ.,பா.ஜ.,வின் தலித் தலைவர். பட்டியலின அணியின் நிர்வாக உறுப்பினராகவும் இருந்துள்ளார். டில்லி பல்கலைக்கழகத்தின் திறந்த கற்றல் பள்ளியில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.வடக்கு டில்லியில் கட்சிக்கு ஆதரவைத் திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் தந்தை இந்திரஜ் நரேலா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, 7 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளன.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us