ADDED : பிப் 22, 2024 11:08 PM
பீதர்: ''வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்ட்டு உள்ளது. எனவே, வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்து கொள்ளலாம்,'' என, பீதர் மாவட்ட தேர்தல் அதிகாரி கோவிந்த ரெட்டி தெரிவித்தார்.
இதுதொடர்பாக பீதரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நடப்பாண்டு ஜனவரி 22ம் தேதி, அனைத்து ஓட்டுச்சாவடிகள், தாலுகா அலுவலகம், மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளில், இறுதி வாக்காளர் பட்டியல் ஒட்டப்பட்டு உள்ளது.
பீதர் மாவட்ட இணையதளமான https://bidar.nic.in/ மற்றும் மாநில இணையதளமான https://voters.eci.gov.in/download-eroll?statecode=S10 அல்லது https://electoralsearch.eci.gov ல் இருந்து இறுதி வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இறுதி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என்றால், https://voters.eci.gov.in அல்லது வாக்காளர் உதவி எண் செயலியில் படிவம் 6 மூலம் உடனடியாக தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். திருத்தங்கள் இருந்தால் படிவம் 8 மூலம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.