தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இறந்தவர் உடலை 4 ஆண்டுகளாக பதப்படுத்தி வைத்துள்ள குடும்பத்தினர்

இறந்தவர் உடலை 4 ஆண்டுகளாக பதப்படுத்தி வைத்துள்ள குடும்பத்தினர்

இறந்தவர் உடலை 4 ஆண்டுகளாக பதப்படுத்தி வைத்துள்ள குடும்பத்தினர்


UPDATED : செப் 30, 2026 10:33 PM

ADDED : செப் 30, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2026 10:33 PM ADDED : செப் 30, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், நான்கு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த 80 வயது முதியவரின் உடலை, குடும்பத்தினர் பதப்படுத்தி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதற்காக 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளனர்.

மும்பை மலாடு பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் கடந்த 2022ல் உயிரிழந்தார். அவர் இறந்தபின், அவர் மீது இருந்த அதீத பாசம் காரணமாக, அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள், இறுதிச் சடங்குகளை நடத்தாமல் உடலை வீட்டில் உள்ள பெரிய அளவு குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்தனர்.

இதற்கிடையே, அவர்கள் வசித்து வந்த கட்டடம் மறுகட்டமைப்பு செய்யப்பட இருந்ததால், உடலை அப்பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு மருந்தகத்துக்கு குடும்பத்தினர் மாற்றினர். அந்த மருந்தகம் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மூடப்பட்டது.

இதனால் உடலை மிகக் குறைந்த வெப்பநிலையில் நீண்ட காலத்துக்கு பாதுகாத்து வைக்கும் சேவையை வழங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு உடலை அனுப்புவது குறித்து அவர்கள் ஆலோசித்து வந்தனர்.

இந்த வினோதமான சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து விசாரணை நடத்தினர். முதியவரின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கும் உடல் பாதுகாக்கப்பட்டு வந்தது குறித்து தெரிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முதியவர் இயற்கையான முறையிலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதால், இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

உடலை அமெரிக்காவுக்கு அனுப்புவதா அல்லது இறுதிச் சடங்குகளை நடத்துவதா என்பது குறித்து குடும்பத்தினர் தற்போது ஆலோசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us