பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரை சாடிய பிரசாந்த் கிஷோர்
பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரை சாடிய பிரசாந்த் கிஷோர்
ADDED : ஜூன் 15, 2024 05:08 PM

பாட்னா: 'பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், மாநில மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்' என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பீஹாரில் உள்ள நவாதா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் பிரதமர் மோடியின் கால்களைத் தொட்டு வணங்கினார். அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி இருந்தது. இந்நிலையில் பீஹார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், மாநில மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார். ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பது அந்த மாநில மக்களின் பிரதிநிதி. ஆனால், நிதீஷ் குமார், சுயலாபத்துக்காக மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். நிதீஷ் குமாருடன் கடந்த காலத்தில் பணியாற்றிய நான் இப்போது ஏன் விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்?. இவ்வாறு அவர் பேசினார்.