கடவுள் தான் தீர்வு கொடுக்கணும்; தீர்ப்புக்கு முன்பு இறைவனை வேண்டிய தலைமை நீதிபதி
கடவுள் தான் தீர்வு கொடுக்கணும்; தீர்ப்புக்கு முன்பு இறைவனை வேண்டிய தலைமை நீதிபதி
ADDED : அக் 20, 2024 08:59 PM

புதுடில்லி: அயோத்தி நில விவகாரத்தில் கடவுள் தான் தீர்வு கொடுக்க வேண்டும் என்று வேண்டியதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமஜென்பூமியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ஹிந்து அமைப்பிற்கே சொந்தம் என்றும், ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகெய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், மாற்று இடத்தில் 5 ஏக்கரில் மசூதி கட்டிக் கொள்ளவும் உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து, கோவில் கட்டுமானப் பணிகள் முடிந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த தீர்ப்பை வழங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம்பெற்றிருந்த சந்திரசூட் தற்போது, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருக்கிறார். மற்ற நீதிபதிகள் ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த நிலையில், நீதிபதி சந்திரசூட்டின் மஹாராஷ்டிராவில் உள்ள தமது சொந்த ஊரான கன்ஹேசாரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'பல வழக்குகளை பார்த்துள்ளோம். ஆனால், அனைத்திற்கும் தீர்வை ஏற்படுத்த முடியாது. அதுபோன்று தான் அயோத்தி ராமர் கோவில் - மசூதி நில விவகாரம் வழக்கும் வந்தது. சுமார் 3 மாத காலம் இந்த வழக்கு என் முன்னே இருந்தது. கடவுள் தான் இந்த வழக்கில் தீர்வு காண வேண்டும் என்று வேண்டி கொண்டேன்,' எனக் கூறினார்.