நாட்டின் 53வது தலைமை நீதிபதியானார் சூர்யகாந்த்; ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
நாட்டின் 53வது தலைமை நீதிபதியானார் சூர்யகாந்த்; ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
ADDED : நவ 25, 2025 05:26 AM

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவர், அடுத்த 15 மாதங்களுக்கு இந்த பதவியில் நீடிப்பார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் இரு தினங்களுக்கு முன் பணி ஓய்வு பெற்றார்.
இதைத் தொடர்ந்து நாட்டின், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பெயரால், ஹிந்தி மொழியில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.
அவர், 2027 பிப்., 9ம் தேதி வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
பதவியேற்பு சம்பிரதாயங்கள் முடிந்ததும், பிரதமர் மோடியின் அருகே சென்று, தலைமை நீதிபதி சூர்யகாந்த் வாழ்த்து பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து பாரம்பரி ய முறைப் படி ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, தலைமை நீதிபதி சூர்யகாந்த், முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.
கவாய் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் ஆகியோர் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்ட னர்.
இவ்விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும் பங்கேற்று, புதிய தலைமை நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல், ராகுல் மீண்டும் காணாமல் போய் உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்பது, யாருக்கும் தெரியவில்லை. இதுபோன்ற மிக முக்கியமான அரசியலமைப்பு நிகழ்ச்சிகளை, அவர் ஏன் புறக்கணிக்கிறார் என்பது தெரியவில்லை. - அமித் மாள்வியா, ஐ.டி., பிரிவு தலைவர், பா.ஜ.,
கொலம்பியா, மலேஷியா என பல நாடுகளுக்கு பறப்பதற்கும், அங்கு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் ராகுலுக்கு நேரம் இருக்கிறது. ஆனால், துணை ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சி, சுதந்திர தின விழா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழா போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு வர மட்டும் நேரம் கிடைக்கவில்லையா? எதிர்க் கட்சித் தலைவருக்கான மாண்பை அவர் குலைக்கிறார் . ஷாநவாஸ் உசேன் மூத்த தலைவர், பா.ஜ.,

