சமூக நீதி பெயரில் ஏமாற்றிய முந்தைய அரசுகள்: பிரதமர் மோடி விமர்சனம்
சமூக நீதி பெயரில் ஏமாற்றிய முந்தைய அரசுகள்: பிரதமர் மோடி விமர்சனம்
ADDED : ஏப் 19, 2024 12:51 PM

அம்ரோஹா: ''நமது நாட்டில் முந்தைய அரசுகள் சமூக நீதி என்ற பெயரில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி.,யை ஏமாற்றி வந்தன. ஆனால் அம்பேத்கர் கண்ட சமூக நீதி கனவை நான் நிறைவேற்ற வருகிறேன்'' என பிரதமர் மோடி பேசினார்.
உத்தர பிரதேசம் மாநிலம் அம்ரோஹா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று சில தொகுதிகளில் முதல்கட்ட லோக்சபா தேர்தல் நடக்கிறது. இது ஜனநாயக திருவிழாவின் மிகப்பெரிய நாள். அனைத்து வாக்காளர்களும் தங்களின் ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அம்ரோஹாவை சேர்ந்த முகமது ஷமி செய்த அற்புதமான சாதனையை உலகமே பார்த்தது. விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக முகமது ஷமிக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கியது.
தற்போதைய லோக்சபா தேர்தல், நாட்டின் எதிர்காலத்திற்கான தேர்தல். கிராமங்கள் மற்றும் ஏழைகளுக்கான தொலைநோக்கு மற்றும் இலக்குகளுடன் பா.ஜ., முன்னேறி வருகிறது. ஆனால் இண்டியா கூட்டணி கட்சிகள் மக்களின் முழு ஆற்றலையும், கிராமங்களையும் பின்னோக்கி நகர்த்துவதில் குறியாக உள்ளன.
நமது நாட்டில் முந்தைய அரசுகள் சமூக நீதி என்ற பெயரில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி.,யை ஏமாற்றி வந்தன. ஆனால் அம்பேத்கர் கண்ட சமூக நீதி கனவை நான் நிறைவேற்றி வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

