UPDATED : ஜூலை 05, 2024 04:12 PM
ADDED : ஜூலை 05, 2024 03:02 PM

புதுடில்லி: பிரிட்டனில் ஆட்சியை பிடித்துள்ள தொழிலாளர் கட்சி தலைவர் கெயிர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: பிரிட்டன் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற கெயிர் ஸ்டார்மருக்கு மனமார்த்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள். இந்தியா பிரிட்டன் இடையேயான பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவிக்க இணைந்து பணியாற்றுவோம். இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்த ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
ரிஷி சுனக்கிற்கும் வாழ்த்து
பிரிட்டனில் பதவி விலகிய ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்து மோடி வெளியிட்ட பதிவில், பிரிட்டனில் சிறந்த தலைமை பண்புக்காகவும், பதவிக்காலத்தில் இந்தியா பிரிட்டன் இடையிலான உறவை பலப்படுத்த ஆற்றிய பணிக்காகவும் ரிஷி சுனக்கிற்கு நன்றி தெரிவிக்கிறேன். சிறந்த எதிர்காலத்திற்காக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.