195 பேர் கொண்ட பா.ஜ. முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:மீண்டும் வாரணாசியில் பிரதமர் மோடி, காந்திநகரில் அமித்ஷா போட்டி
195 பேர் கொண்ட பா.ஜ. முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:மீண்டும் வாரணாசியில் பிரதமர் மோடி, காந்திநகரில் அமித்ஷா போட்டி
UPDATED : மார் 02, 2024 07:50 PM
ADDED : மார் 02, 2024 06:51 PM
புதுடில்லி: 195 பேர் கொண்ட பா.ஜ. முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது.பா,ஜ.,வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
நாடு முழுவதற்குமான பார்லி.,பொது தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.இதற்கான அறிவிப்பு தேர்தல் கமிஷன் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து நாடுமுழுவதும் உள்ள தேசியகட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி அமைப்பதில் முமும்முரம் காட்டி வரும் வேளையில் வேட்பாளர்கள் அறிவிப்பும் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேசிய கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ,, தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
இது குறித்து பா.ஜ,. தேசிய பொது செயலாளர் வினாத் தாவ்டே கூறியதாவது: முதற்கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றவை
34 அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
பட்டியிலில் 28 பெண்கள்
47 பேர் 50 வயதுக்குட்பட்டோர்
உ,பி,.,-51
மே.வங்கம் -20
தெலங்கானா- 9
குஜராத் -15
ம.பி.,.-24
ராஜஸ்தான் -15
கேரளா -12
ஜார்கண்ட், சத்தீஸ்கர் தலா -11
பிரதமர் மோடி, வாரணாசி ; அமைச்சர் அமித்ஷா காந்திநகர்
அமைச்சர் ராஜ்நாத்சிங்-லக்னோ
ராஜிவ் சந்திரசேகர் -திருவனந்தபுரம்,கேரளா
நடிகர் சுரேஷ் கோபி- திருச்சூர்,கேரளா
மத்திய அமைச்சர் முரளீதரன்- ஆட்டிங்கால்,கேரளா
ஜோதிர் ஆதித்யா சிந்தியா -குனா
கிரண்ரிஜூஜூ -அருணாசல் மேற்கு
ஜிதேத்தர் சிங்- உத்தம்பூர்
ஓம்பிர்லா -கோட்டா
கஜேந்திர செகாவத்- ஜோத்பூர்
சர்பானந்தா சோனாவால் -திப்ரூகர்
ஹேமாமாலினி- மதுரா
ஆகியோர் உட்பட 195 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

