ADDED : ஜன 13, 2024 04:40 PM

புதுடில்லி: ‛‛ இளைஞர்கள் தான் நமது நாட்டின் சொத்து, பலம்'' என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார்.
டில்லியில் உள்ள பா.ஜ., தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நட்டா பேசியதாவது: ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியோரை பெரிய ஜாதிகளாக பிரதமர் மோடி அடையாளம் காட்டியுள்ளார். நாடு முழுவதும் ராமர் மீது பக்தி பரவி வரும் இந்த நேரத்தில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் சாதுக்கள் மீது தாக்குதல் நடக்கிறது.
இளைஞர்கள் தான் நமது நாட்டின் சொத்து, பலம். இந்திய மக்கள் தொகையில் சுமார் 61% பேர் 35 வயதிற்கு உட்பட்டவர்கள். இது இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது என்ற மோடியின் தீர்மானத்தை நிறைவேற்ற பெரிதும் உதவும். இளைஞர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர பா.ஜ., அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கி உள்ளது. ஐ.ஐ.டி.,கள், எய்ம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.