நைஜீரியா, பிரேசில், கயானா செல்கிறார் பிரதமர் மோடி
நைஜீரியா, பிரேசில், கயானா செல்கிறார் பிரதமர் மோடி
UPDATED : நவ 12, 2024 10:27 PM
ADDED : நவ 12, 2024 09:30 PM

புதுடில்லி: பிரதமர் மோடி, நவம்பர் 16ல் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்குச் செல்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை முடித்துக் கொண்டு பிரேசில் மற்றும் கயானாவிற்கும் மோடி செல்ல உள்ளார்.
பிரதமர் பயணம் குறித்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் மோடி அரசு முறை பயணமாக நைஜீரியா செல்கிறார். இந்த இரண்டு நாள் பயணத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நைஜீரிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். 17 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். புலம்பெயர்ந்த இந்தியர்களின் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுவார்.
18, 19 தேதிகளில் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார்.
பிறகு, 19 முதல் 21 தேதிகளில் கயானாவுக்கும் செல்கிறார். 1968 க்கு பிறகு கயானாவிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைக்கிறது. அங்கு நடக்கும் CARICOM - INDIA உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.