ADDED : மார் 14, 2024 10:25 PM
பெங்களூரு -பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 16ல் கலபுரகிக்கு வருகை தருகிறார். இங்கு பொது கூட்டத்தில் உரையாற்றுவார், என மாநில பா.ஜ., முதன்மை செயலர் சுனில்குமார் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 16ல் மதியம் 2:00 மணிக்கு கலபுரகிக்கு வருகை தருகிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார். மார்ச் 18ல், மதியம் 2:00 மணிக்கு ஷிவமொகாவில் பிரம்மாண்ட பொது கூட்டத்தில் உரையாற்றுவார்.
பிரதமரின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்துக்கு, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலபுரகியின், என்.வி., விளையாட்டு மைதானத்திலும், ஷிவமொகாவின், அல்லம பிரபு மைதானத்திலும் நிகழ்ச்சி நடக்கும்.
வரும் நாட்களில் தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட முக்கிய தலைவர்கள், பல்வேறு லோக்சபா தொகுதிகளில் பிரசாரம் செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.

