தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மருத்துவமனையில் இருந்து கைதி ஓட்டம்

மருத்துவமனையில் இருந்து கைதி ஓட்டம்

மருத்துவமனையில் இருந்து கைதி ஓட்டம்


ADDED : ஜன 13, 2024 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2024 11:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி, போலீசாரின் கவனத்தை திசை திருப்பி தப்பி ஓடினார்.

சிக்கமகளுரின், மாகலு கிராமத்தைச் சேர்ந்த ரவுடி பூர்ணேஷ், 30, பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். கொலை முயற்சி வழக்கில் இவர், போலீசாரால் தேடப்பட்டார்.

ஒரு மாதத்துக்கு முன்பு போலீசார், ரவுடியை கைது செய்ய சென்றபோது, போலீசாரை ஆயுதங்களால் தாக்க முற்பட்டார். அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.

காலில் குண்டு பாய்ந்ததில், காயமடைந்த அவர் ஒரு மாதமாக, சிக்கமகளூரு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை, பாதுகாப்பில் இருந்த போலீசாரின் கண்களை மறைத்து, மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us