ADDED : செப் 10, 2025 04:34 AM

புதுடில்லி : மத்திய பிரதேசத்தின், 'ஜல் நிகாம் லிமிடெட்' என்ற அரசு நிறுவனம் அம்மாநிலத்தில் உள்ள சத்தார்பூர், சாகர், தின்டோரி மாவட்டங்களில், 2023ல், 974 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று நீர்ப்பாசன திட்டங்களுக்கான ஒப்பந்தம் விட முடிவு செய்தது.
இதை பெற, இந்துாரைச் சேர்ந்த, 'தீர்த் கோபிகான்' என்ற தனியார் நிறுவனம் 183 கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு போலி வங்கி உத்தரவாத ஆவணங்களை ஜல் நிகாமில் சமர்ப்பித்தது.
இந்த மோசடிக்கு உதவிய பஞ்சாப் நேஷனல் வங்கி சீனியர் மேலாளர் கோவிந்த் சந்திரா ஹண்ட்ஷா, முகமது பிரோஸ் கான் ஆகியோரை சி.பி.ஐ., கைது செய்தது.
இந்த போலி உத்தரவாத ஆவணங்களை நம்பி, தீர்த் கோபிகான் நிறுவனத்துக்கு மூன்று ஒப்பந்தங்களை ஜல் நிறுவனம் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து, 183 கோடி ரூபாய் மோசடி செய்த தீர்த் கோபிகான் நிறுவன எம்.டி., மகேஷ் கும்பானி, கவுரவ் தகாத் ஆகியோரை சி.பி.ஐ., கைது செய்தது.