வாலிபரை நிர்வாண படம் எடுத்து மிரட்டிய இளம்பெண்கள் கைது
வாலிபரை நிர்வாண படம் எடுத்து மிரட்டிய இளம்பெண்கள் கைது
ADDED : செப் 10, 2025 06:14 AM

திருவனந்தபுரம்: கேரளாவில், வாலிபரை நிர்வாண படம் எடுத்து மிரட்டி, பணம் பறித்த, இரு பெண்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த வாலிபர், மாவேலி கரையைச் சேர்ந்த கவுரி நந்தா, 20, என்ற பெண்ணுடன் பழகினார். குந்தமங்கலத்தில், தன் வீட்டுக்கு அந்த வாலிபரை கவுரி நந்தா அழைத்து சென்று அவரை நிர்வாண படம் எடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு பின், அந்த பெண் மற்றும் அவருடன் இருந்த பனஞ்சேரியை சேர்ந்த அன்சிகா, 28, அவரது கணவர் முகமது அபிப், 30, ஆகியோர், வாலிபரிடம் நிர்வாண படத்தை காட்டி மிரட்டி, பணம் கேட்டனர்.
வாலிபர், தன் வசம் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்த பின்னரும், தொடர்ந்து மிரட்டி, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பறித்துள்ளனர். பாதிக்கப்பட்ட வாலிபர் புகாரில், கவுரி நந்தா, அன்சிகா, முகமது அபிப் ஆகிய மூவரையும் கோழிக்கோடு குந்தமங்கலம் போலீசார் கைது செய்தனர்.