வன்முறை வாயிலாக பிரச்னையை தீர்க்க முடியாது: அன்னா ஹசாரே
வன்முறை வாயிலாக பிரச்னையை தீர்க்க முடியாது: அன்னா ஹசாரே
ADDED : ஜூலை 23, 2026 07:16 PM

மும்பை: வன்முறை வாயிலாக எந்த பிரச்னையையும் தீர்க்க முடியாது என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: எந்த பிரச்னையையும் வன்முறை வாயிலாக தீர்க்க முடியாது என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். வன்முறை எந்த பிரச்னையையும் தீர்க்காது. வன்முறையை வேலையை அதிகரித்துவிடும். நான் 22 முறை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். ஆனால், ஒரு முறை கூட வன்முறையில் ஈடுபடவில்லை.
இளைஞர்களின் அதிகாரமே, நாட்டின் அதிகாரம். நீங்கள் தவறாக சென்றால், அது தவறு. கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். பொது மக்களே எஜமானர்கள். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்களின் சேவகர்கள். எந்த வேலையும் செய்ய வேண்டும் என மக்கள் விரும்பினா், அதனை செய்ய வேண்டும். ஆனால் தடியடி நடத்துவது தவறானது. இவ்வாறு அவர் கூறினார்.
