பெங்களூரு - மங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கு திட்டம்
பெங்களூரு - மங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கு திட்டம்
ADDED : நவ 22, 2024 07:19 AM
பெங்களூரு: பெங்களூரு - மைசூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு, வாகனங்களும் இயக்கப்படுகின்றன. இது போன்று பெங்களூரு - மங்களூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு - மங்களூரு; மங்களூரு - பெங்களூரு செல்ல 350 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டும். ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆகிறது. இந்த நேரத்தை குறைக்கும் நோக்கில், பெங்களூரு - மங்களூரு இடையே, எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டால், பெங்களூரில் இருந்து மங்களூருக்கு, நான்கைந்து மணி நேரத்தில் சென்றடையலாம்.
திட்ட அறிக்கை தயாரிக்க, டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. ஒன்பது நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றுள்ளன. 2025 ஜனவரி வேளையில் டெண்டர் முடிவாகும் வாய்ப்பு உள்ளது.
பெங்களூரில் இருந்து வெளிநாட்டுக்கு பொருட்களை கொண்டு செல்ல வசதியாக இருக்கும்.
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் எரிபொருள், காஸ் போன்ற பொருட்களை மங்களூரு துறைமுகம் வழியாக, பெங்களூருக்கு கொண்டு வர உதவியாக இருக்கும் என்பது, மத்திய அரசின் திட்டமாகும்.