10 லட்சம் தெருநாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்த திட்டம்
10 லட்சம் தெருநாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்த திட்டம்
ADDED : செப் 11, 2025 03:32 AM
சிவில்லைன்ஸ்:'தேசிய தலைநகர் பிராந்தியத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் தெருநாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்தப்படும்' என, அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் விலங்குகள் நல வாரியக் கூட்டம் நடைபெற்றது. விலங்குகள் நலன், தெருநாய் பிரச்னை, 'ரேபீஸ்' நோய் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிக்கை:
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து டில்லியில் 10 லட்சம் தெருநாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்தப்படும்
உலக ரேபீஸ் தினம் நெருங்கி வருவதால், டில்லியில் ரேபீஸ் கட்டுப்படுத்த விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
நாய் கடி சம்பவங்களைத் தடுப்பது மற்றும் தடுப்பூசி செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவது
நாய் கணக்கெடுப்பு மற்றும் கண்காணிப்பு முறையை விரைவில் செயல்படுத்த வேண்டும்
செல்லப்பிராணி கடைகளைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும். இதற்காக ஒரு சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்
தொடர்புடைய அனைத்து விதிகளும் விரைவில் செயல்படுத்தப்படும்
உள்ளூர் மட்டத்தில் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக பிராந்தியக் குழுக்கள் அமைக்கப்படும்.