ADDED : ஜன 15, 2026 01:27 AM

ஈரோடு: விசைத்தறி துறையில் வளர்ந்து வரும், தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்ய, 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான, சாதாரண விசைத்தறிகளை, நாடா இல்லா ரேப்பியர் தறிகளாக தரம் உயர்த்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
குறைந்த வேகமுள்ள பழைய தறிகளை மாற்றி, அதிக வேகமுள்ள புதிய ரேப்பியர் தறிகளை கொள்முதல் செய்யவும் அல்லது புதிய ரேப்பியர் தறிகளை கொள்முதல் செய்ய மூலதன மானியம் வழங்கப்பட உள்ளது.
பழைய தறிகளில், தறி உபகரணங்கள் பொருத்தி, ரேப்பியர் தறிகளாக மாற்றப்பட உள்ளது.
'கம்ப்ளீட் ரேப்பியர் கிட், எலக்ட்ரானிக் கலர் செலக்டர், வெப்ட் அக்குமுலேட்டர், வெப்ட் சென்சார், கியர் பாக்ஸ், பேனல் போர்டு, டக் இன் டிவைஸ்' ஆகியவை மாற்றப்படும்.
ரேப்பியர் உபகரணங்கள் பொருத்தவும், புதிய ரேப்பியர் தறிகளை வினியோகம் செய்யவும் விருப்பமுள்ள மற்றும் அனுபவம் உள்ள சப்ளையர்கள் இணைந்து செயல்பட, வரும் 23க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்த விபரத்தை, 'சரக கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம், 426, பவானி மெயின் ரோடு, அசோகபுரம், ஈரோடு - 638004' என்ற முகவரியில் நேரில் அல்லது, 98943 60232 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

