தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சீன செல்போன் உறைகளுக்கு பொருட்குவிப்பு வரி விதிக்க பரிந்துரை

சீன செல்போன் உறைகளுக்கு பொருட்குவிப்பு வரி விதிக்க பரிந்துரை

சீன செல்போன் உறைகளுக்கு பொருட்குவிப்பு வரி விதிக்க பரிந்துரை


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: சீனாவில் இருந்து மிக குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் செல்போன் உறைகள் மீது, 5 ஆண்டுகளுக்கு பொருட்குவிப்பு வரி விதிக்க, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வர்த்தக தீர்வுகள் பொது இயக்குநரகம் பரிந்துரைத்துள்ளது.

இந்திய உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மலிவான சீன உறைகளின் அதிக இறக்குமதியால், இந்தியாவில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள், சந்தையில் போட்டியிட முடியாமல் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதன் விளைவாக, இந்திய நிறுவனங்களின் சந்தை பங்கு 98 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக பாதியாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், சீன உறைகளின் பங்கு 2 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக அசுர வளர்ச்சியடைந்துள்ளது.

நஷ்டம் தாங்காமல், இந்தியாவில் செல்போன் உறைகளை தயாரிக்கும் 40க்கும் மேற்பட்ட ஆலைகளில், 10 ஆலைகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. தொடர்ந்து இயங்கும் நிறுவனங்களும், தங்களது மொத்த உற்பத்தி திறனில் 27 முதல் 30 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும், உள்நாட்டில் விற்பனையாகாத உறைகளின் இருப்பு கிடங்குகளில் பெருமளவு தேங்கியுள்ளதால் இந்திய நிறுவனங்கள் தவித்து வருகின்றன.

இதனை கருத்தில்கொண்டு, 1,000 உறைகளுக்கு 72 டாலர் கூடுதல் வரியாக செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு உறைக்கு 7 ரூபாய் வரை வரி விதிக்கப்படும். ஆனாலும், இதனால் சில்லரை விற்பனை விலையில் 1 சதவீதத்திற்கும் குறைவான மாற்றமே இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படாத பிரத்யேக ‘அராமிட் பைபர்’ உறைகளுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ஒரு பரிந்துரை மட்டுமே; மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த பின் இது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.

ரூ. 2.14

கடந்த 2024 – 25ம் நிதியாண்டில், சீனாவிலிருந்து இறக்குமதியான ஒரு உறையின் சராசரி விலை. இது 2021 – 22ம் நிதியாண்டில் 18 ரூபாயாக இருந்தது.

7.65 கோடி

சீன உறைகளின் இறக்குமதி எண்ணிக்கை, 2023 – 24ம் நிதியாண்டில் 7.65 கோடியாக பல மடங்கு அதிகரித்துள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10 லட்சமாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us