UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 05:44 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடியில் என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து அமைச்சர் சிவக்கொழுந்து ஓட்டு சேகரித்தார்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில், என்.ஆர்.காங்., சார்பில் வேட்பாளராக அசோக் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, தாகூர் நகர் உள்ளிட்ட பகுதிகளில், அமைச்சர் சிவக்கொழுந்து, வையாபுரிமணிகண்டன், சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார், நந்தி ஸ்ரீதரன் ஆகியோர் ஜக்கு சின்னத்திற்கு வீடு வீடாக சென்று தீவிரமாக ஓட்டு சேகரித்தனர். அப்போது என்.ஆர்.காங்., நிர்வாகிகள், சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
