சகஜம் தான்
பொதுவாக இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியை மக்கள் ஆதரிப்பது சகஜம்தான். அது மட்டுமின்றி, பணம், மதுபானம் விளையாடியது. அரசு இயந்திரம் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இதுவே கர்நாடகாவின் மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணம். மக்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம். காங்கிரசாரை போன்று, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது, நாங்கள் குற்றம்சாட்டமாட்டோம்.
- பிரஹலாத் ஜோஷி, மத்திய அமைச்சர்
மனம் தளராதீர்
மாநிலத்தில் காங்கிரஸ் அரசு உள்ளது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது பெரிய விஷயம் அல்ல. இப்போது அதுதான் நடந்துள்ளது. நான் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லவில்லை. ஆனால் என் மகன் ஹரிஷ்கவுடாவும், ம.ஜ.த., தொண்டர்களும், நிகில் குமாரசாமி வெற்றி பெறுவார் என, என்னிடம் கூறினர். மூன்றாவது முறையாக தோற்றதால், நிகில் மனம் தளர கூடாது.
- ஜி.டி.தேவகவுடா, எம்.எல்.ஏ., - ம.ஜ.த.,
அம்சங்கள் ஆய்வு
ஷிகாவியில் காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி அல்ல. பணத்துக்கு கிடைத்த வெற்றி. அக்கட்சி பணத்தை தண்ணீராக செலவிட்டு வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., வேட்பாளராக நான் தோற்றாலும், தொகுதி வளர்ச்சிக்காக, மக்களின் நலனுக்காக நான் பணியாற்றுவேன் எங்கள் தோல்விக்கு காரணமான அம்சங்களை ஆய்வு செய்து, அவற்றை சரி செய்து கொள்வோம்.
- பரத் பொம்மை, பா.ஜ., வேட்பாளர், ஷிகாவி

