ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் இந்திய ரயில்வேயில் நேரம் கடைபிடித்தல் பிரமாதம்; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் இந்திய ரயில்வேயில் நேரம் கடைபிடித்தல் பிரமாதம்; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
ADDED : டிச 06, 2025 07:34 AM

புதுடில்லி: ஐரோப்பிய நாடுகளை விட இந்திய ரயில்வேயின் நேரம் கடைபிடிப்பு சிறந்தது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பார்லிமென்டின் ராஜ்யசபாவில் விவாதத்தின் போது, கேள்விகளுக்கு அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்: 2014ம் ஆண்டுகளுக்கு முன், முந்தைய ஆட்சி காலத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.100 கோடி மட்டுமே பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. ஆனால் பாஜ ஆட்சியில் அது பல மடங்கு அதிகரித்து உள்ளது. ஐரோப்பிய நாடுகளை விட இந்திய ரயில்வேயின் நேரம் கடைபிடிப்பு சிறந்தது.
இந்திய ரயில்வேயின் நேரம் கடைபிடிப்பு ஒட்டுமொத்தமாக 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவையின் தாக்கத்தை எடுத்துரைக்கிறது. பல ஐரோப்பிய நாடுகளை விட இந்திய ரயில்வே சரியான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
உத்தரபிரதேசத்தில், ரயில்வே திட்டங்களுக்கான பட்ஜெட்டை பிரதமர் உயர்த்தியுள்ளார், இது ஒரு வரலாற்று நடவடிக்கை. வரலாற்று கலாசார இணைப்புகளைக் கொண்ட பாலியா ரயில் நிலையத்திலிருந்து 82 ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு ஒரு முக்கிய காரணியாக இருப்பதால் ரயில்வே கீழ் பாலங்கள் மற்றும் மேம்பாலங்களில் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக மேம்பாலங்களுக்காக 100 க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

