பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் அதிகாரி ஆகணுமா? 213 பேருக்கு வேலை ரெடி!
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் அதிகாரி ஆகணுமா? 213 பேருக்கு வேலை ரெடி!
UPDATED : செப் 10, 2024 02:29 PM
ADDED : செப் 04, 2024 11:51 AM

புதுடில்லி: பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் அதிகாரி, மேலாளர், தலைமை மேலாளார் உட்பட 213 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 15.
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் அதிகாரி, மேலாளர், தலைமை மேலாளார், கார்ப்பரேட் கம்யூனிகேஷன் மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 213 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வி தகுதிகள் என்ன?
* தலைமை மேலாளர், மூத்த மேலாளர் பணியிடங்களுக்கு BE/ B. Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* கார்ப்பரேட் கம்யூனிகேஷன் மேலாளர் பணியிடங்களுக்கு MBA/PGDM/PGDBM பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
* அதிகாரி பணியிடங்களுக்கு 20 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* மேலாளர் பணியிடங்களுக்கு 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* மூத்த மேலாளர் பணியிடங்களுக்கு 25 வயது முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* தலைமை மேலாளர் பணியிடங்களுக்கு 28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://punjabandsindbank.co.in/என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 20.
தேர்வு செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்
விண்ணப்பக்கட்டணம் ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100.