sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்

/

புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்

புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்

புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்

7


ADDED : ஜூன் 28, 2025 08:35 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 08:35 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: ஒடிசா புரி ஜெகந்நாதர் கோவில் திருவிழாவில் ஒரே சமயத்தில் பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கிய 600க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று (ஜூன் 27) கோலாகமாக துவங்கியது. புரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம், துவங்கி ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது.

காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் ரதயாத்திரைக்கான சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெய்வங்கள் அவரவர் தேர்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பிரமாண்டமான பஹந்தி ஊர்வலம் நடைபெற்றது.

ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோவிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோவில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோவிலுக்கு இழுத்துவரப்படும்.

இந்த ரத யாத்திரையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே சமயத்தில் குவிந்தனர். இதனால், கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, பாலகன்டி பகுதியில் தேர் சிக்கிக் கொண்டது.

இந்த நிலையில், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 70 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்; 625 பக்தர்கள் வாந்தி, மயக்கம் மற்றும் சிறு காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us