தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தரமான, பாதுகாப்பான நெடுஞ்சாலைகள் முக்கியம்: நிதின் கட்காரி

தரமான, பாதுகாப்பான நெடுஞ்சாலைகள் முக்கியம்: நிதின் கட்காரி

தரமான, பாதுகாப்பான நெடுஞ்சாலைகள் முக்கியம்: நிதின் கட்காரி


ADDED : அக் 05, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2026 05:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆமாதாபாத்: குஜராத்தின் ஏக்தா நகரில் தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது.

இதனை துவக்கி வைத்துமத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது:தரம், பாதுகாப்பு, வேகம் மற்றும் உலகளாவிய தரத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதில் கவனம் தேவை. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்போது முறையான ஆய்வு , திட்டமிடல், நிலம் கையகபடுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வேண்டும். துவக்க நிலையில் சிறந்த முறையில் தயாரானால், தாமதம், செலவு குறையும்.

நெடுஞ்சாலை திட்டமிடல் மற்றும் திட்ட வடிவமைப்புடன் சாலை பாதுகாப்பை துவக்கத்திலேயே ஒருங்கிணைக்க வேண்டும். திட்டமிடல் மற்றும் கட்டுமானக் கட்டங்களிலேயே விபத்து அபாயம் மிகுந்த இடங்களைக் கண்டறிந்து, பொருத்தமான பாதுகாப்பு வசதிகளை சேர்ப்பது, பாதுகாப்பான நெடுஞ்சாலைகளுக்கும் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கும் பங்களிக்கும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நவீன நெடுஞ்சாலைகள் என்பது நகரங்கள், சிறு நகரங்கள், துறைமுகங்கள், சந்தைகள் மற்றும் தொழி்ல மையங்களுக்கு இடையே தடையற்ற இணைப்பை வழங்கும். வர்த்தகம், முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கிறது. போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மற்றும் செயல்படுத்தும் முகமைகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கட்காரி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us