UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 05:56 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இ.சி.ஆரில் பறக்கும் படையினர், துணை ராணுவத்தினருடன் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, தொகுதி எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார், தேர்தல் பறக்கும் படையினர் இணைந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதன்படி, இ.சி.ஆர்., மடுவுபேட் எல்லையில் வெளிமாநில வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கார், பைக் உள்ளிட்டவைகளில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஏதேனும் கொண்டு வரபடுகிறதா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
