UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 05:56 PM

புதுச்சேரி: பா.ஜ., மாநில பொறுப்பாளர் சுரேந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் பயணமாக நேற்று புதுச்சேரி வந்துள்ளார்.
பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை, ‘மன்கி பாத்’ நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் கூட்டம் மற்றும் மாநில மையக்குழு கூட்டத்தில், மாநில தலைவர் ராமலிங்கத்துடன் ஆலோசனை நடத்தினார்.
இன்று காலை முதல் மாலை வரை பல்வேறு அணி பொறுப்பாளர்கள், சமூக ஊடகப்பிரிவு, தொழில்நுட்ப பிரிவு மற்றும் ஊடக பிரிவு பொறுப்பாளர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.
நாளை காலை 9:00 மணிக்கு புதுச்சேரி காந்தி சிலை அருகே பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் ‘சேவா ஜோதி’ நடைபயணம் நடக்கிறது. அப்போது பிரதமர் மோடி நேரலையில் உரையாற்றுகிறார்.
தொடர்ந்து, சேவா ஜோதி ஏற்றப்பட்டு, 2047ம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரதம் பெயரில் உறுதிமொழியேற்கப்படுகிறது.
கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
மூன்று நாள் பயணத்தில் தொகுதிகள், கிளைகள் வரை கட்சியின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடக்கிறது.
