தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ விசாரணை கைதிகள் மீதான வழக்குகளை விரைந்து விசாரியுங்கள்!: மாஜி காங்., அமைச்சர் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

விசாரணை கைதிகள் மீதான வழக்குகளை விரைந்து விசாரியுங்கள்!: மாஜி காங்., அமைச்சர் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

விசாரணை கைதிகள் மீதான வழக்குகளை விரைந்து விசாரியுங்கள்!: மாஜி காங்., அமைச்சர் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

18


UPDATED : அக் 22, 2026 11:50 PM

ADDED : அக் 22, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

18

UPDATED : அக் 22, 2026 11:50 PM ADDED : அக் 22, 2026 08:36 PM


18
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- சிறப்பு நிருபர் -

'நாடு முழுதும் விசாரணை கைதிகள் மீதான வழக்குகளை விரைந்து விசாரியுங்கள். அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு உறுதி செய்துள்ள தனி நபர் சுதந்திரத்தை காலவரையின்றி பறிக்கமுடியாது' என, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மீதான நிதி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் கடந்த 2018 - 23 வரை காங்கிரசை சேர்ந்த முதல்வர் அசோக் கெலாட் முதல்வராக பதவி வகித்தார். அப்போது, மத்திய அரசின், 'ஜல் ஜீவன்' திட்டத்தை செயல்படுத்துவதில், போலி சான்றிதழ்கள் கொடுத்து ஒப்பந்தங்கள் பெற்றதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

அடிப்படை உரிமை



கடந்த 2023ல் பா.ஜ., ஆட்சி அமைந்து, முதல்வராக பஜன் லால் சர்மா பதவியேற்ற நிலையில், இந்த ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சந்திர ஜோஷி உள்ளிட்ட 22 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது.

இதில் முன்னாள் அமைச்சர் சந்திர ஜோஷி, 72, அவருக்கு உடந்தையாக இருந்ததாக முகேஷ் பதக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் முகேஷ் பதக், கடந்த பிப்., 18 முதலும், முன்னாள் அமைச்சர் சந்திர ஜோஷி, கடந்த மே 7 முதலும், சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், விசாரணை நடத்தப்படாமல் பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி முன்னாள் அமைச்சர் சந்திர ஜோஷி மற்றும் முகேஷ் பதக் ஆகியோர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரியிருந்தனர். அவர்களது மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஷீல் நாகு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் தனிநபர் சுதந்திரமும், விரைவான விசாரணையை பெறுவதற்கான உரிமையும் அரசியல் சாசன சட்டப் பிரிவு 21ன் கீழ் பாதுகாக்கப்பட்ட அடிப்படை உரிமையாகும். பொதுநல திட்டத்தை செயல்படுத்துவதில் பெரிய அளவில் நடக்கும் நிதி முறைகேடுகள், அதிகார அமைப்புகளின் கூட்டு சதி ஆகியவை விசாரிக்கப்பட வேண்டியவை .

அதே சமயம், குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை மட்டும் கருத்தில் கொண்டு, ஜாமின் வழங்குவதை மறுக்கவோ, காலவரையின்றி விசாரணை கைதிகளை சிறையில் வைத்திருக்கவோ முடியாது.

நிபந்தனை


இவ்வழக்கில் புலனாய்வு முடிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 22 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 124 சாட்சிகளையும், 20,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் ஆய்வு செய்து விசாரணை தொடங்கவே நீண்டகாலம் பிடிக்கும்.

அதுவரை, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைக்க முடியாது. விசாரணைக்கு முன்பாகவே நீண்டகாலம் சிறையில் அடைப்பது, விசாரணை கைதியின் தனிநபர் சுதந்திரத்தை பாதிப்பதோடு, விரைவான விசாரணைக்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும். விசாரணை நடத்தாமலேயே தண்டனை வழங்குவதை அனுமதிக்க முடியாது. எனவே, இருவரையும் உடனடியாக ஜாமினில் விடுவிக்க உத்தரவிடுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளைக் கலைக்க முயலக் கூடாது, விசாரணைக்கு நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும் போன்ற நிபந்தனைகளும் அவர்களுக்கு விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us