குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார வாகனம்; மத்திய அரசு ஒப்புதல்
குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார வாகனம்; மத்திய அரசு ஒப்புதல்
ADDED : டிச 30, 2025 02:29 PM

புதுடில்லி: குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார வாகனம் இடம்பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடில்லியில் ஜன.26ம் தேதி குடியரசு தின விழா நடைபெறுகிறது. விழாவில் முப்படைகள் அணிவகுப்பு, அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு இடம்பெறுவது வழக்கம்.
இந்த அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார வாகனங்கள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவ அலங்கார வாகனங்கள் பங்குபெறும். இந்தாண்டு அணி வகுப்புக்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்க உள்ளது. இம்முறை 10க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் இடம்பெற உள்ளன.
இந் நிலையில் 2026ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் அலங்கார வாகனம் இடம் பெற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து இருக்கிறது. பசுமை மின்சக்தி என்ற தலைப்பில் அலங்கார வாகனம் இடம்பெறும் என்று உள்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

