பீஹார் சட்ட மேல்சபை எதிர்கட்சி தலைவராக ராப்ரி தேர்வு
பீஹார் சட்ட மேல்சபை எதிர்கட்சி தலைவராக ராப்ரி தேர்வு
UPDATED : பிப் 16, 2024 09:46 PM
ADDED : பிப் 16, 2024 07:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா: பீஹார் சட்ட மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் ராப்ரி தேவி தேர்வு செய்யப்பட்டார்.
இம்மாநிலத்தில் ஐக்கியஜனதா தளம்,-ராஷ்ட்ரீய ஜனதாதளம் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ்குமாரும், துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவும் பதவி வகித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் கூட்டணியை முறித்துக்கொண்டு, நிதீஷ்குமார் திடீரென பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியாகி விட்ட ராஷ்ட்ரீய ஜனதா தள நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் சட்டசபை மேல்சபை எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியான ராப்ரி தேவி எதிர்கட்சித்தலைவராக அறிவிக்கப்பட்டார்.