பார்லி.,யில் எம்.பி.,க்களுக்கு ராகி இட்லி, சோள உப்புமா ரெடி
பார்லி.,யில் எம்.பி.,க்களுக்கு ராகி இட்லி, சோள உப்புமா ரெடி
UPDATED : ஜூலை 17, 2025 03:02 AM
ADDED : ஜூலை 17, 2025 01:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ல் துவங்க உள்ளது.
இந்நிலையில், பார்லிமென்ட் உணவகத்தில் எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் உணவகத்தில் எம்.பி.,க்களுக்கு இனி, சைவ உணவுகளாக ராகி இட்லி, சோள உப்புமா, தானிய பாயசம், பாசிப்பருப்பு தோசை, காய்கறி சூப், தக்காளி ரோஸ்ட், பார்லி அல்லது சோளம் சாலட், கார்டன் பிரஷ் சாலட் போன்றவை இடம்பெறும்.
இதேபோல் அசைவ உணவுகளாக கிரில்டு சிக்கன் அல்லது மீன் வகைகளுடன் வேகவைத்த காய்கறிகளும் பரிமாறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எம்.பி.,க்களுக்கு ஹெர்பல் டீ, சர்க்கரை சேர்க்கப்பட்ட சோடாக்களுக்கு பதிலாக மாம்பழம் உள்ளிட்ட பழ வகைகளில் செய்யப்பட்ட பானம் வழங்கப்பட உள்ளது.