ராகுலால் 5 லி., பால் வீணா பேச்சு: ரூ. 250 இழப்பீடு கேட்டு பால் வியாபாரி வழக்கு
ராகுலால் 5 லி., பால் வீணா பேச்சு: ரூ. 250 இழப்பீடு கேட்டு பால் வியாபாரி வழக்கு
ADDED : ஜன 21, 2025 08:24 PM

பாட்னா: லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுலின் பேச்சை கேட்டதில் தனக்கு ரூ. 250 நஷ்டமடைந்ததாக பால் வியபாரி போலீசில் புகார் அளித்த சம்பவம் பீஹாரில் நடந்துள்ளது.
கடந்த 15-ம் தேதி டில்லி கோட்லா சாலையில் ‛இந்திரா பவன்' என்ற பெயரில் புதிய காங்கிரஸ் தலைமை அலுவலக கட்டட திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட லோக்சபா எதிர்கட்சி தலைவரும் எம்.பி.யுமான ராகுல், இந்திய அரசை எதிர்த்து போராடுவோம் என பேசியது சர்ச்சை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் பீஹாரின் சமஸ்டிபூர் மாவட்டம் சோனூப் என்ற கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் சவுத்ரி என்ற பால் வியபாரி, ராகுல் மீது உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் இந்திய அரசை எதிர்த்து போராடுவோம் என ராகுல் பேசியதை கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தேன், லோக்சபா எதிர்கட்சி தலைவர் ஒருவர் பிரிவினையை தூண்டு விதமாக பேசியது சரியல்ல. இவரது பேச்சால் அதிர்ச்சியில் என் கையில் வந்திருந்த 5 லிட்டர் கொண்ட பால்கேனை தவறவிட்டேன். பால் கீழே சிதறியதால் எனக்கு ரூ. 250 எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே எனக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு காரணமான ராகுல் மீது பாரதிய நீதி சட்டம் 2023 பிரிவு 152-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். தனிநபராக கோர்ட்டில் மனு செய்துள்ளதால், அவரது மனுவை கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதா, இல்லையா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

